Ads Here

Thursday, June 28, 2018

குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒரு கணணியை ஆப் செய்வது எப்படி? || Automatically Shut Down Your Computer

எமது கணனிக்கு நாம் பெரிய வேலைகளை கொடுக்கும் நேரங்கள் உண்டு. அவ்வாறான நேரங்களில் எமது கணணியை பார்த்துக்கொண்டே இருந்து வேலைகள் முடிந்தவுடன் ஆப் செய்வது கொஞ்சம் சிரமமான விடயம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமக்கு அந்த குறிப்பிட்ட வேலை முடியும் நேரத்தை கணிக்க முடியும். அப்படி ஒரு நேரத்தை கணித்து அந்த நேரத்தில் எமது கணணியை தானாக ஆப் செய்ய முடியும். அது எவ்வாறு என்று கீழே வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.



Please Subcribe To Get Youtube Notification


குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒரு கணணியை ஆப் செய்வது எப்படி?


உங்கள் கணணி டேஸ்க்டாப்-இல் Right click செய்து அதில் New shortcut எனும் ஆப்ஷன்-ஐ தெரிவு செய்யுங்கள்.

http://techviral.com/wp-content/uploads/2015/09/Make-Your-Computer-Shutdown-At-Given-Particular-Time-1.jpg

அடுத்து எதற்கு ஷார்ட்கட் வேண்டும் என கேட்கப்படும்.

http://techviral.com/wp-content/uploads/2015/09/Make-Your-Computer-Shutdown-At-Given-Particular-Time-2.jpg

இப்போது அந்த இடத்தில் shutdown -s -t 600 என டைப்  செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்தால் எனது கணணி இன்னும் 10 நிமிடங்களில் ஆப் ஆகி விடும். இது ஏன் என்றால் 60 sec = 1 நிமிடம். எனவே 10 x 60 = 600. (shutdown -s -t 600)

இதை செக்கண்ட்ஸ் கணக்கில் மட்டுமே செயற்படுத்தலாம்.

.http://techviral.com/wp-content/uploads/2015/09/Make-Your-Computer-Shutdown-At-Given-Particular-Time-3-1.jpg

எனவே உங்களுக்கு நேரத்தை அதிகப்படுத்தி வைக்க வேண்டும் என்றால்.. கீழுள்ள உதாரணத்தை பாருங்கள்.

உதாரணம் - உங்களுக்கு 1 மணித்தியாலயத்தில் ஆப் செய்ய வேண்டும் என்றால், 10 நிமிடங்களுக்கு 600 செக்கன்கள் உள்ளது. அனவே 60 நிமிடங்களுக்கு 3600 செக்கன்கள் உள்ளன.. ஆகவே உங்களுக்கு 1 மணித்தியாலயத்தில் ஆப் செய்ய வேண்டும் எனின் நீங்கள் shutdown -s -t 3600 என டைப் செய்தல் வேண்டும்.
இதே போல் 5 மணித்தியாலயங்களில் ஆப் செய்ய வேண்டும் எனின், 1 மணித்தியாலயம் = 36௦௦ செக்கன்கள். அப்போது 3600 x 5 = 18000. அப்போது shutdown -s -t 1800 என டைப் செய்தல் வேண்டும்.

மேலுள்ள வழிமுறைகளை செய்து முடித்த பின் அந்த ஷாட்கட்-ஐ சேவ் செய்து அதை இரு முறை கிளிக் செய்து ஓபன் செய்ய வேண்டும்.

அவ்வாறு ஓபன் செய்த பின் கீழுள்ள வாறு ஒரு நோடிபிகேஷன் வரும்.

http://techviral.com/wp-content/uploads/2015/09/Make-Your-Computer-Shutdown-At-Given-Particular-Time-4.jpg

அவ்வளவு தான். இவ்வாறு செய்வதால் உங்கள் கணணியை குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தானாக ஆப் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment